பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 28 அக்டோபர், 2014

புஷ்ப வனத்தில் புஸ்வான வேடிக்கை.

புஷ்ப வனத்தில் புஸ்வான வேடிக்கை.

 

தித்திக்கும் தீபாவளியை அதே நாளில் , குடும்பத்தினருடன் , உறவினர்களுடன்,நண்பர்களுடன், சுற்றத்தாருடன்,கூடி மகிழ்ந்து , புத்தாடை, பலகாரங்கள், இனிப்புவகைகள் குலதெய்வ வழிபாடு,
ஆலய வழிபாடு, சினிமா , தொலைக்காட்சி நிகழ்சிகள் அனைத்தையும் கண்டு சுவைத்து குதூகலித்து  இந்தியாவில்  இருக்கும் , நம் உறவுகள் கொண்டாடி இருப்பார்கள்.

இந்தியாவில் இருந்தாலும் , ஒரு சிலர், இராணுவத்தில் பணிபுரிபவர்கள்,காவல் துறை, தீ அணைப்புதுறை, மருத்துவ துறை, போன்ற அத்தியாவசிய பணியில்  இருப்போரை தவிர மற்ற எல்லோரும் தீபாவளியை, குதூகலமாக கொண்டாடி மகிழ்ந்திருபீர்கள் அதில் எல்லோருக்கும் சந்தோஷம் தான்.

அதே சமயத்தில், இந்திய திருவிழா மற்றும் பண்டிகைகளை அதே நாளில் அதே முகூர்த்ததில் கொண்டாட முடியாத நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வெளி நாடுகளில் அதுவும் இந்திய கலாசாரம் அறவே இல்லாத நாடுகளில் வாழும் நம்மவர்களை கொஞ்சம் நினைத்து பார்க்க வேண்டும்.

திரை கடலோடியும் திரவியம் தேட சொன்ன நம் முன்னோர்களின் தெய்வ வாக்கை சிரமேற்கொண்டு,கடல்களை தாண்டி எலிவாலை பிடிப்பதாக நினைத்து புலிவாலை   பிடித்திருக்கும் பெரும்பாலான நம் இந்திய குடும்பங்கள், ஒரு நல்ல நாள் பெருநாள்களில் குடும்பத்தோடும் , அம்மா அப்பா,தாத்தா ,பாட்டி, சகோதரர் சகோதரிகள் உறவினர்களோடு, நண்பர்களோடு  சேர்ந்து கொண்டாட முடியவில்லையே என ஏங்கி கண்ணீர் மல்கும் சூழ்நிலைகளும் அதிகம்.

நம் நாட்டு திருவிழா பண்டிகைகளுக்கு,வெளி நாட்டில் எப்படி விடுமுறை விடுவார்கள், அப்படியே நாம் நமது ஆண்டு விடுமுறையில் ஒரு நாள் விடுப்பு எடுக்காலாம் என்றால், அதுவும் எல்லோராலும் எடுக்க முடியாது.
கணவனும் மனைவியும் வேலைக்கு போகும் குடும்பங்களில் இருவருக்கும் சேர்ந்தாற்போல் விடுப்பு கிடைப்பது அரிது.

அப்படியே இருவருக்கும் விடுப்பு கிடைத்தால், பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு விடுப்பு  கிடையாது.

பள்ளிகூட நாட்களில் பிள்ளைகள் விடுப்பு எடுத்தால் , அபராதம் மற்றும் பெற்றோருக்கு தண்டனை போன்ற சூழ்நிலை இருக்கின்ற காரணத்தால் வெளி நாடுகளில் வாழும் இந்தியர்கள் பெரும்பாலும் அந்தந்த பண்டிகைகளை அந்தந்த நாட்களிலேயே (அதுவும்  வார நாட்களில் வரும் பண்டிகை நாட்களை) கொண்டாடுவது என்பது பெரும்பாலும் முடியாததொன்றாகின்றது.

இது போன்ற சூழ் நிலைகளில் அதே பகுதி மற்றும் சுற்று புறங்களில் உள்ள நண்பர்கள் அனைவரும் தொலை பேசி வாயிலாக பேசி பெரும்பாலோருக்கு வசதியுள்ள நாளாக ஒன்றை தேர்ந்தெடுத்து அதுவும் வார இறுதி நாளாக பார்த்து பல நாட்களுக்கு அல்லது வாரங்களுக்கு முன்னதாகவே ஒரு நாளை தீர்மானித்து அந்த நாளில் கடந்து போன பண்டிகைகளை கொண்டாடி மகிழ்வது வழக்கம்.

அவ்வகையில் கடந்த வாரம் செவ்வாய் கிழமை வந்த தீபாவளி திருநாளை கடந்த சனிக்கிழமை  சுமார் பதினைந்து குடும்பங்கள் ஒன்றுகூடி ஒரு பொதுவான ஒரு  விழா கூடத்தில் கூடி சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்து குதூகலித்தனர்.

இதில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புதிய உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் ஆடி பாடி கொண்டாடியதை நினைத்தாலே நெஞ்சம் மகிழ்கின்றது.

இந்த கொண்டாட்டத்தில் மேலும் ஒரு சிறப்பு: அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டது மட்டுமின்றி, விழா குழுவிலும் சிறப்பு பங்கேற்று நடத்தினார்கள்.


அந்த இனிய தீபாவளி கொண்டாட்டத்தின் போதுநடை பெற்ற சிலவற்றை பகிர்வதும் ஒரு மகிழ்ச்சிதானே?

பட்டாடை சரசரக்க ,வண்ணவண்ண ஆடைகள் மினுமினுக்க ஆடவரும் பெண்டீரும் , சிறுவர் சிறுமியரும்  தங்கள் பாரம்பரிய ஆடை அலங்காரங்களுடனும் , மருதாணி, மை, மைனர் செய்ன், கண்ணாடி மற்றும் ங்க வைர நகைகளை அணிந்து , எல்லா பொன் வெள்ளி நகைகளையும் தோற்கசெய்யும், மாறா புன்னகையுடன் மல்லி முல்லை ரோஜா மலர்களின் வாசம்,( இது போன்று ஆடை  அலங்கார அணிகலன்களை இது போன்ற சமயங்களில் மட்டுமே அணிய முடியும், கலாச்சாரமும் சீதோஷ்ணமும் இதற்க்கு முக்கிய காரணம்). ஒருவருக்கொருவர் தங்கள் அன்பையும் பாசத்தையும் , வாழ்த்துக்களையும் மாறி மாறி பரிமாறி கொண்ட காட்சி, யை கம்பனாலும் மட்டுமல்ல எந்த கொம்பனாலும் வர்ணிக்க முடியாது.. நான் எம்மாத்ரம்?

விழா கூடமும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது , பாரம்பரிய குத்து விளக்கை தவிர .(தீ விபத்தை தவிர்க்கும் பொருட்டு)

குத்து விளக்கிற்கு பதில் பேட்டரியில் ஒளிரும் சிறு சிறு அகல் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன.

 அங்கு வந்திருந்தோரில் பலர் ஒருவரை ஒருவர் முதன் முதலில் அன்றுதான்   நேரில் சந்திப்பவர்களாகவும் இருந்தனர்.

விழா ஒழுங்கு செய்திருந்த குழுவினரில் எனக்கு நன்கு அறிமுகமான ஒருவரின் சிறப்பு அழைப்பின் பேரில் நானும் கலந்துகொண்டேன்.

முதலில் சுமார் பதினைத்து பேர்கொண்ட (ஒரு வயது குழந்தை முதல் பெரியவர் வரை) குழுவினர், இறைவணக்கமாக,

அலை பாயுதே கண்ணா என் மனம் அலை பாயுதே......என பாடி இறைவனுக்கு முதலில் துதி செலுத்தின பாங்கு என்னை உள்ள படியே பூரிப்படைய செய்ததது.

நாம் நிற்பதும், நிர்மூலமாகதிருப்பதும் இறைவன் செயலன்றோஅவனின்றி ஒரு அணுவும் அசையாதல்லவா?

அப்படி நம்மின் இமைகள் இருவிழியை இணைந்து காப்பதுபோல் பொறுப்புடன் நம்மை காத்து வழிநடத்தும் எல்லாம் வல்ல இறைவனை முதன்மை படுத்தி ,மையபடுத்தி விழா துவங்கியது.

அதை தொடர்ந்து,

நாம் என்னதான் அந்நிய நாட்டில் குடியிருந்தாலும், சொர்கமே என்றாலும் அது நம் ஊரு போல வருமா, அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா?

எத்தனை ஆயிரம் மையில்களை கடந்து வாழ்தாலும் தாயை மறக்க முடியுமாநம்  நாட்டை மறக்க முடியுமா?

அடுத்து பாடப்பட்ட இரண்டு பாடல்களும் கண்ணீரை வரவழைத்தது.

வந்தே மாதரம் -- இந்த ராகத்தை பழைய அகில இந்திய வானொலி ஒளிபரப்பின் போது கேட்டது அர்த்தர்க்கு பிறகு அதை அதே ராகம் தாளத்தில் கேட்டபோது உணர்ச்சி மிகுதியால் என் கண்களில் நீர் வழிந்தது என்றால் அது எள்ளின்முனையளவும் மிகையல்ல என்பதை எல்லோரும் நம்புவீர்கள் என நம்புகின்றேன்,

 இந்த பாடலை பயிற்றுவித்தவர் - அந்த நாட்களில் அதே அகில இந்திய வானொலியில் கர்னாடக இசை கலைஞராக - மிருந்தங்க வித்வானாக பணியாற்றியவர் ( அவர் அனுமதி இன்றி அவர் பெயரை  வெளியிடுவது - தர்மமல்ல).

பாடல் முடிந்த உடன் யாருமே கைதட்டி மகிழ்ச்சியை வெளிபடுத்த வில்லை... ஏன்?

பிறகுதான் புரிந்தது பாட்டை கேட்ட  அனைவரும் மெய்மறந்த நிலையில் இருந்தனர் என்னைபோலவே என்று, பின்னர் நினைவுக்கு வந்தவராய் எல்லோரும் பலத்த கர ஓசை எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர் அதை கேட்டு நம் அன்னை - பரத தாயும் மகிழ்ந்திருப்பாள்.

அதை தொடர்ந்து ;

ஜெய் ஹோ ,ஜெய் ஹோ

ஆஜா ஆஜா  ஜிந்த் ஷமியானே......

இந்த பாடல் ஆர்  ரஹ்மானின்  இசை பின்னணியுடன் மேடையில் பாடப்பட்டதும் கூடியிருந்த அத்தனை பேர் உள்ளங்களிலும் தேசபற்று முழுமையாக ஆட்கொண்டதை உணர முடிந்தது.

அடை தொடர்ந்து,

"மகளிர் அணியை" சார்ந்த ஒரு நங்கை பாலிவுட் பாடல் ஒன்றுக்கு நளினமாக நடமாடி கூட்டத்தினரை மகிழ்வித்தார், இத்தனை நளினமாக நடனமாடியவர்  பிறந்ததே ஒரு நடன பள்ளி என்பதை  பிறகு தெரிந்துகொண்டேன், ஏழு வயதிலிருந்து நாட்டியம் பயின்றவர் நடனத்தின் எல்லா பரிமாணங்களையும் பல மேடைகளில்  பரிமாறினவர்.

பின்னர், குழந்தைகள் இரண்டுபேர் வாத்திய கருவிகளை  வாசித்து காட்டினர் , அந்த வாத்திய கருவிகளின் உயரத்திற்கும் இவர்களின் உயரத்திற்கும் ஏணி வைத்தும் எட்டமுடியவில்லை.- மூர்த்தி  சிறியதாயிருந்தாலும் , கீர்த்தி பெரியதாயிருந்தது.

இந்த சிறிய வயதிலேயே அவர்கள் கொண்டிருந்த இசை ஞானத்தின் உயரத்தை எந்த ஏணியாலும் எட்டமுடியவில்லை.  

-அனைவரின் ஏகோபித்த பாராட்டை பெற்றனர்.

பின்னர்" இளைஞர் பாசறை"யின் சார்பாக ஒரு குழு நடனம்.

‘வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு,
அது மூடி திறக்கும்போதே நம்ம கவுக்கும் (சென்சாரு)....... குடி குடியை கெடுக்கும்.

என்ற பாடலுக்கு அருமையனான நடன அமைப்பு செய்து அந்த பாட்டுக்கேற்ற முக பாவனை உடல் மொழி அத்தனையும் கலந்து ஆடிகொண்டிருந்தனர் தொடர்ந்து வரும் பாடல் வரிகளில்,

 "மம்மி சொல்ற பொண்ண கட்டுனா டார்ச்சர் இல்லடா ,நாம டாவடிக்கிற  பொண்ண கட்டுனா டவுசர் அவுரும்டாஎன்னும் வரிகள் ஒலிக்கும் போது,

உண்மையிலேயே....உண்மையிலேயே.... ஒருவர் .....எல்லோர் எதிரிலும்.... பெண்கள் குழந்தைகள் ...பெரியவர்கள்...சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில்.......தான் அணிந்திருந்த .....புதிய   ஜீன்ஸ் ட்ரவுசரை..... பெல்ட் போட்டு இறுக்கமாக கட்டியிருந்த  அந்த நீல நிற ஜீன்ஸ்  ட்ரவுசரை........

'என்ன நடந்திருக்கும் கொஞ்சம் யோசித்து வையுங்கள்   பிறகு சொல்கிறேன்.' 

பிறகு;
விருந்தினர்களை அறிமுகம் செய்துவைத்தனர்  ஒரு புதிய அணுகுமுறையோடு:

அதாவது  பண்டிகை கொண்டாடும் குடும்பங்களை தவிர சிறப்பு விருந்தினர்களாக வரவழைக்கப்பட்டவர் மேடைக்கு சென்று தங்களை அனைவருக்கும் அறிமுகம் செய்துகொண்டு ஓரிரு வார்த்தைகள் பேசி வாழ்த்து சொல்ல வைத்தனர்.

அவ்வகையில் என்னுடைய பெயர் அழைக்கப்பட்டது, மேடைக்கு சென்று என்னை அறிமுகம் செய்துகொண்டு:

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள், ஒளி திருநாளாம் இத்தீப திருநாளில்,  இல்லங்களில் மட்டுமின்றி நம் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் இன்ப ஒளி வீசட்டும் என்று  னது வாழ்த்து கூறினேன்.

நான் சொல்லி முடிப்பதற்குள் என்னை அழைத்திருந்த நண்பர் , என்னுடைய கவிதைகளை ரசித்திருக்கின்றார் போலும் , அவர் உடனே ஒலி பெருக்கி  மூலம்  இவர் இப்போது நமக்காக ஒரு கவிதை சொல்லுவார் என்று முன் அறிவிப்பு ஏதுமின்றி மேடைமுன் அறிவிப்பு  செய்துவிட்டார்.

சரி என்று, பாடல் பாடியவர்கள் நடனமாடியவர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்து விட்டு, விழா அரங்கில் குத்து விளக்கு அனுமதிக்கப்படாதிருந்த ஆதங்கத்தில் "குத்து விளக்கு" எனும் தலைப்பில் ஒரு கவிதை சொல்ல போகிறேன் என்று  சொன்னவுடன் அரங்கில் நிசப்தம்:

கூட்டத்தினர் எதையோ எதிபார்திருந்திருப்பர்.

குத்து விளக்கு.

"கோயிலுக்கு" சென்று நானும்
கும்பிட்டு திரும்புகையில்
கோயில் சிலை போன்றதொரு
குத்துவிளக்கு எதிர்பட்டாள்!

எதிர்பட்ட அவளின் கையில்  
ருந்திட்ட மல்லிகைசரம்
எதிர்பாரா விதமாக
என் முன்னே விழுந்ததுவே!

விழுந்திட்ட சரமெடுத்து- நான்
விருப்பமுடன் அவள் தலையில்
அழுத்தமாக வைத்ததுமே
அவள் விரலும் என் முகத்தில்
ஆழமாக பதிந்ததுவே!


பதிந்துவிட்ட வேகத்திலே
பதறிவிட்ட நான் உடனே
குதித்தெழுந்து அமர்ந்துகொண்டேன்
பின்னர்
 கனவென்று உணர்ந்து கொண்டேன்.
நன்றி வணக்கம்.


பிறகு என்ன நிகழ்ந்திருக்கும்?

கூடியிருந்த அத்தனை குடும்ப குத்துவிளக்குகளும் (!!!) குடும்பத்துடன் சேர்ந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர் என்பதை நான் சொல்லாமலே நீங்களே குத்துமதிப்பாக புரிந்து கொண்டிருபீர்கள் என எனக்கு தெரியும்.


எல்லோர் முகத்திலும் குத்துவிளக்கின் ஒளிவெள்ளம்.

அதன்  பின்னர் ஜோடி பாடல் வரிசையில் ஒரு ஜோடி "வெள்ளை புறா ஒன்று.." என்ற பாடலை பாடி பார்வையாளர்களின் மனதை வெள்ளையடித்தனர் - பின்னர்  கொள்ளையடித்தனர் கணவனும் மனைவியுமாக சேர்ந்து.


அதை தொடர்ந்து:

விழா நிகழ்ச்சியில் பிரதானமாக இடம் பெற்றது பாட்டுக்கு பாட்டு (கல்லூரி காலத்து பாட்டுக்கு பாட்டு பின்னர் சொல்கிறேன்)நிகழ்ச்சி.


இதில் ஆண்கள் ஒருகட்சி, பெண்கள் ஒரு கட்சி, சுவாரசியமாக நடந்த அந்த நிகழ்ச்சியின் முதல் பாடல் ஆரம்பிக்க வேண்டிய முதல் எழுத்து, அமிழ்துக்கு ஒப்புடைய  - இத்தனை பெரிய கூட்டத்தை ஒன்றிணைத்த - நமது தாய் தமிழின் - அமுத சிகரமாம் அகர எழுத்து "".


ஆண்கள் குழுவினர் ஆரம்பித்தனர் "அம்மா என்றழைக்காத உயிரில்லையே"

மணி மணியான பாடல்களை பெண்கள் பாட, பாட்டுக்கு பாட்டு களைப்பின்றி -களைகட்டியது.

அதன் பிறகு நல்ல விருந்து.

வந்திருந்த அனைவரும் ஒன்றிணைந்து  குழு புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

விழா ஒருங்கிணைப்பாளர்நண்பரின் வீட்டு புஷ்ப வனத்தில் அனைவரும் கூடி (தோட்டத்தை தவிர  நம்ம ஊர் போல சாலைகளிலோ, வீட்டு முற்றத்திலோ பட்டாசுகளை வெடிக்க அனுமதி கிடையாது.)

வானவேடிக்கைகளை கொளுத்தி மகிழ்ந்தோம். .(பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து)                              

                                                                                                                                                         

 பட்டாசு ,மத்தாப்பு, கம்பி சுருசுரா ,  சங்கு சக்கரம், பூத்தொட்டி, வானத்தில் சீறி பறந்து பின்னர் வண்ண வண்ண பூக்களை தூறி மறையும் ராக்கெட்டுகள் அனைத்தையும் கொளுத்தி முடிக்க இன்னும் இரண்டு மணி நேரமானது.

காசு கரியானது கீழே , கார்மேகம்   வண்ண பூவானமானது மேலே.

அந்த நண்பரின் புஷ்ப  வனத்தில் இருந்த தாவர மலர்களோடு நமது மழலை மலர்களும் மகிழ்ச்சியில் புன்னகை பூத்தது, மத்தாப்பு -புஸ் வானங்கலோடும் சேர்ந்து.

அந்த புஷ்ப வனத்து மலர்களும் , மீண்டும் அடுத்த தீபாவளி கொண்டாட்டங்கள் விரைவில் வராதா என ஏக்கபெருமூச்சி விட்டன என்னைபோலவே.

நண்பரின் வீட்டு தொலைகாட்சி பெட்டியில் சரவணன் மீனாக்ஷி  தொடர் ஓடிக்கொண்டிருந்தது.

பின்னர் அனைவரும் பிரிய மனமின்றி பிரியா விடைபெற்று பிரிந்து வந்தோம்.

ஜீன்ஸ் ட்ரவுசர் காரர் என்ன செய்தார் ....

இன்னும் அதிக இறுக்கமாக பிடித்து அழகாக  முக பாவனைகளை காட்டி அந்த வரிகளுக்கு நியாயம் கற்பித்தார் .    .......... ஹாஹாஹாஹாஹா... (வேறு எதையோ நினைத்து நீங்கள் ஏமார்ந்திருந்தால் உங்களுக்குபப்பி ஷேம்”!!. )

நன்றி .

வணக்கம்.

மீண்டும் (சி)ந்திப்போம்.


கோ.

16 கருத்துகள்:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. saravanaa,

      Thanks for your comments, special thanks to you and your family for your warm welcome to us.

      Take care.

      Ko.

      நீக்கு
  2. Wow!!! it is not just the wonderful reflection of the event, but hats off for capturing the innate feelings of the people...superb!

    பதிலளிநீக்கு
  3. Hello Sakthi,

    Thank you so much for your appreciation and admiration.

    This came out of the joy which had overflown in my heart in joining you all.

    keep visiting the blog and do comment.

    regards to all at home

    bye for now.

    KO

    பதிலளிநீக்கு
  4. நண்பா..
    உம் எழுத்தை பார்த்ததும் அங்கேயே இருந்தது போல் ஓர் உணர்ச்சி. நடந்த காரியத்தை அப்படியே பிரதிபலித்தாய். மேடையில் ஏறிய பின் பாடலை கேட்டாலும் நீ அலற மாட்டாய் அதிர வைப்பாய் என்று எனக்கு தெரியும். உனக்கு நினைவு இருக்கின்றதா என்று தெரியாது ஆனால் என்னால் மறக்க முடியாத ஓர் நிகழ்ச்சி.

    முதுகலை முதலாம் ஆண்டில் அங்கே விடுதியில் படித்து கொண்டு இருக்கையில், படிப்பிற்கு நடுவே ஒரு சிறிய பாட்டு போட்டி..
    இளையராஜாவின் "மகா கணபதி" என்ற பாடலுக்கு அன்று நாம் இருந்த நிலையை வைத்து பாட்டு எழுத வேண்டும். இத்தனை வருடம் கழித்தும் இந்த போட்டியை நான் மறக்காமல் இருக்க காரணம் என்ன தெரியுமா? உன் வாழ்க்கையிலேயே அன்று தானே நீ .. "போனால் போகட்டும் இவன்" என்று எனக்கு வெற்றியை விட்டு கொடுத்தாய். அங்கே நீ - நான் எழுதிய பாடல் கண்டிப்பாக உனக்கு நினைவில் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  5. விசு,

    ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!!,,உள்ளத்தின் நினைவில் "தடி"த்து இடம்பெற்ற நிகழ்வு அல்லவா, மறக்க முடியுமா?

    வாழ்த்துகளுக்கு நன்றி.

    கோ

    பதிலளிநீக்கு
  6. ஆஹா அருமையான தொகுப்பு தங்கள் தீபாவளித் திருநாளின் கொண்டாட்டம் பற்றியது. அங்கு பட்டாசு எல்லாம் வெடிக்க அனுமதி உண்டா என்ன?! தாங்கள் இருப்பது அமெரிக்காவில்தானே! அப்படித்தான் நணப்ரி விசு சொன்னதாக நினைவு!

    அங்கு கொண்டாடியய்து பற்றி வருத்தம் வேண்டாம் நண்பரே!...ஏனென்றால் இங்கு தீபாவளி எல்லாம் மிகவும் அன்னியமாகிவிட்டது. அங்காவது எல்லோரும் குழுமி பாங்காக ஆடிப் பாடிக் கொண்டாடுகின்றீர்கள். ஆனால் இங்கோ, ஆரியாவும்,சசூரியாவும், விஜயும், கார்த்தியும் ஆக்ரமிக்கின்றார்க்ள். அவர்கள் பேட்டிக் கொடுத்தது என்னவோ ஒரு சில மணி நேரம் அதுவும் முன்னதாகவே, தீபாவளி அன்று குடும்பத்துடன். ஆனால் நம் மக்களை, தீபாவளி அன்று வளைத்துக் கட்டி தொலைக்காட்சி முன் அமர்த்தி வாய் பிளந்து வாயில் போவது அல்வாவா? பால் கோவவா என்பது கூடத் தெரியாமல்....ம்ம்ம் என்ன சொல்ல.....இவர்கள் வெடிக்கின்றார்களோ இல்லையோ திரையில் நடிகர்கள் வெடிப்பதை வேடிக்கை பாருக்கும் கூட்டம்...
    வீட்டிற்கு நாம் இனிப்பு காரத்துடன் போனாலும் வாங்கனு சொல்லிட்டு மீண்டும் தொலைகாட்சிப் பெட்டிதான்....நாமும் எத்தனை நேரம் தான் இருப்பது/...அப்படியே திரும்ப வேண்டியதுதான்....

    அதற்கு நீங்கள் வெளிநாட்டில் வசிப்பவர்கல் மிகச் சிறப்பாகவஏ கொண்டாடுகின்றீர்கள். மகிழ்ச்சியாக உள்ளது.

    இப்போதெல்லாம் நடனம் ஆடுபவர்களின் உடை விழுந்து விடுமோ என்று அவர்கள் பயப்படுகின்றார்களோ இல்லையோ நாங்கள் மிகவும் பயப்படுவதுண்டு...இங்கு!

    தேசீய கீதம் அங்கு ஒலிக்கின்றது...மகிழ்ச்சி....இங்கு வருடத்திற்கு இரு முறைதான்!

    மிக்க நன்றி நண்பரே! எங்களை ஐயா என்று அழைக்க வேண்டாமே! நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடன், திரு துளசிதரன் மற்றும் கீதா (ஐயா வேண்டாம் என்பதால்) அவர்களுக்கு,

      வணக்கம்.

      இங்கு பட்டாசுகள் ஒரு சில பதிவுபெற்ற, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட அங்காடிகளில் விற்பார்கள். நம்ம ஊர் லட்சுமி வெடி, யானை வெடி,2000 வாலா ... போன்றவை கிடையாது. மாறாக, பூதொட்டி, சங்கு சக்கரம், கம்பி மத்தாப்பு, சுறு சுறா, வானத்தில் சீறி பாய்ந்து வெடித்து வண்ண ஜாலங்கள் காட்டும் ராக்கெட் போன்றவை தாரளமாக கிடைக்கு. நம்ம ஊர் போல பலர் ஒன்றாக சேர்ந்து சிண்டிகேட் அமைத்து மொத்த விலையில் கொள்முதல் செய்வது முடியாது.

      நீங்கள் சொன்ன நடிகர் நடிகையரின் பேட்டிகள் , விழாகாலங்களில் நமது பொன்னான நேரத்தை விழுங்கி விடுவதில் எனக்கும் உடன்பாடு இல்லைதான்.

      பண்டிகை காலங்களில் சினிமா நட்சத்திரங்களின் நிகழ்ச்சிகளை ஓரளவுக்கு நான் சகித்து கொண்டாலும் , நமது தேசிய தினங்களான, குடியரசு தினம், சுதந்திர தினத்தன்று அவர்களது பேட்டியும் நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பும் தொலை காட்சி நிறுவனங்களின் தேச பக்தியை??.... என்னால் கொஞ்சம் கூட சகிக்க முடியாது.

      நடனமாடுபவர்களின் ஆடைகள் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள், என்னசெய்வது, சிலர் நடன திறமையை விட அவர்களின் அரைகுறை ஆடைகளையும் அருவருக்கத்தக்க அங்க அசைவுகையும் தானே மூலதனமாக கருதுகின்றனர்.

      நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள், இங்கு தொலைக்காட்சி பெட்டியில் பார்க்கும் விளையாட்டு போட்டியில் இந்தியா வெற்றி பெறும்போதும், அல்லது அவர்கள் சிறப்பாக ஆடும் போதும் நாங்கள் அடையும் மகிழ்ச்சியும் போடும் ஆரவார சத்தமும் கூரையை முட்டி திரும்பும்.மேலும் நமது தேசிய கொடி மற்றும் தேசிய கீதம் இசைக்கும் போதெல்லாம் , வீட்டில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை, கீதம் முடியும் வரை எழுந்து நிற்போம் என்று நான் சொன்னால் நம்புவீர்களா? நீங்கள் நம்புவீர்கள் எனக்கு தெரியும்.

      ஏதோ வெளி நாட்டில் இருப்பதால் நாட்டுப்பற்று இருப்பதாக நினைக்க வேண்டாம், மாணவனாக இருக்கும்போதிலிருந்தே தேச பற்றுள்ளவன் தான்,( தேசிய மாணவர் படை வீரன் ) இன்னும் அப்படிதான்.

      மேலும் நான் அமெரிக்காவில் அல்ல இங்கிலாந்தில் வசிக்கின்றேன்.

      வருகைக்கும், கருத்து வீச்சிக்கும் , திறனாய்வுக்கும், வாழ்த்துக்கும் நன்றி (ஐயா) நண்பரே.

      நன்றி.

      கோ.

      நீக்கு
  7. அந்தாதிக் கவிதை அருமை! ஆனால் என்ன கனவாகிப் போனதே எனபதுதான் வருத்தமாகிவிட்டது!

    பதிலளிநீக்கு
  8. அன்புடன், திரு துளசிதரன் மற்றும் கீதா (ஐயா வேண்டாம் என்பதால்) அவர்களுக்கு,

    வணக்கம்.

    அந்தாதி கவிதை கனவானதில் வருத்தம் என சொன்னீர்கள், அப்படியானால் நான் உண்மையிலேயே அறை வாங்கி இருந்தால் சந்தோஷபட்டிருப்பீர்கள்.... ம்ம்ம்ம்ம்ம்.

    மற்றவன் வேதனை சிலருக்கு தீபாவளி?....

    வாழ்க நலமுடன்.

    நன்றி.

    கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. aஹஹஹ நண்பரே! ஐயையோ அறை வாங்கியிருப்பீர்கள் என்றால் ,,,அந்த வருத்தம் என்ரு சொன்னதை எடுத்து விடுகின்றோம்....அஹஹ்ஹா...அது சும்ம தமாஷுக்குத்தான்...

      தாங்கள் இருப்பது இங்கிலாந்தில் என்பதை அறிந்து கொண்டோம்.... நம்புகின்ரோம். நண்பரே தங்கள் தேசப்பற்றை! தங்கள் எழுத்திலிருந்து அறிகின்ரோம்! மிக்க நஹ்னறி விரிவான விளக்கத்திற்கு!

      நீக்கு
  9. திரு, துளசிதரன் அவர்களுக்கு,

    நானும் தமாஷுக்கு தான் வருத்தப்பட்டேன்(நாங்க எல்லாம் வருத்தபடாத.......சங்க ஆயுட்கால உறுப்பினர்).

    உங்கள் விருப்பம் அப்படியே இருக்கட்டும்.

    எதையும் நீக்கவேண்டாம்.

    நன்றி.

    கோ

    பதிலளிநீக்கு
  10. Hello Sir,

    Apologies that I am not able to comment in Tamil as I am not really good at it.

    It was amazing to have a read through your blog. When I heard your 'kuthuvilakku kavithai' on the day of celebration, I was completely impressed not just about the way you composed it but also how beautifully you presented it to us. The way you expressed it added even more beauty to it. It was spellbinding to hear our language being used so beautifully. There is a flow in your writing and its evident that you know where and how the words need to be put which is an art that you cant see in everyone.
    I usually like to read things that has picture illustration but it was not required to read your article as I was able to picturise everything again from your beautifully composed words. I am glad that you joined the celebration with us and you made it ever memorable with your wonderful writing which in turn made me pen few lines below about the usage of a good language. Thanks to the family who introduced you to us.

    "The Beauty of Language"

    Verbalizing what you feel is a thought,
    Imparting life to those words is an art!!
    When people are hesitant to speak kind language,
    Thou made us realize the beauty of it like a sage!!
    It is an alarm to the youth of this generation,
    Good language always leaves a nice impression!!
    Mesmerizing the mind of a reader with words,
    Is an art thou acquire with thy flair for words!!

    Cheers,
    Mrs Sasi

    பதிலளிநீக்கு
  11. Dear Mrs.Sasi,

    Thank you so much for your kind words of appreciation and admiration. it's so amazing that some one has listened to the presentation during the function, normally people won't be so attentive and focused for any oratory, unlike for action oriented ones.

    It shows the amount of interests , involvements and regards you had/have towards the language and the content of the presentation.

    I thoroughly enjoyed every moment of my stay over there for which I must thank the family who extended their invitation and made me to meet so many of our people.

    your poetic expression is really like a breeze and like a stream meanders and flowing over gently sloping ground.

    I am glad to know that my work triggered you to bring out your hidden talents.

    If time permits please go through other articles in my blog and post your invaluable comments and share with your family and friends.

    Thanks again for your visit to my blog and your boosting response.

    Take care.

    bye for now.

    KO.

    பதிலளிநீக்கு
  12. கோ,
    வணக்கம்,
    அழுகை மாறி சிரிக்க அடுத்த பதிவா, பரவாயில்லை மனித மனம் அறிந்தவரோ,,,,,,,,,
    அறையா?
    நான் கூட வேறு எதுவோ என்று,,,,,,,,,,,,
    நிஜத்தில் நடந்தது, கனவில் வந்ததோ,
    எல்லாவற்றையும் நம்புகிறேன்,
    தாங்கள் வெளிநாடு இப்போ, அப்போ,,,,,,,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  13. எல்லாம் கனவில்தான், அதிலும் அன்பிற்குபதில் அறைதான்.
    கவிதை பிடித்திருந்ததா?
    அந்த குத்துவிளக்கை என் "அக"ல் விளக்கொளி உதவியுடன் தேடி வருகிறேன் இன்னும் தென்படவில்லை.
    எங்கேனும் பார்த்தால் சொல்லி அனுப்புங்கள்.
    வெளிநாடு இப்போ... அப்போ.....தாய் நாடு
    கோ

    பதிலளிநீக்கு