பின்பற்றுபவர்கள்

வியாழன், 14 ஜனவரி, 2016

பொங்க"low" பொங்கல் !!

எளிமையே இனிமை 

நண்பர்களே,

வருடத்திற்கு ஒருமுறை வந்துபோகும் இந்த உன்னத திருவிழாவை கொண்டாட ஓராண்டாக காத்து இருந்தோம்  என்பது உண்மைதான்.


கடன் பட்டு நெற்றி வியர்வை மட்டுமின்றி ரத்த வியர்வையையும்  சிந்தி 
கடந்த பன்னிரண்டு மாதங்களாக மழையிலும், வெயிலிலும், பனியிலும், காற்றிலும், காட்டிலும், மேட்டிலும்  கஷ்ட்டப்பட்டு , நிலத்தை உழுது, பயிரிட்டு, நீர்பாய்ச்சி, உரமளித்து. வேலி அமைத்து, கதிர் மணிகளை கண்ணின்மணிபோல்  பாதுகாத்து வளர்த்து வந்தோம்.

இப்படி வளர்த்து அறுவடைக்கு தயாராக இருந்த சூழ் நிலையில் , யார் கண் பட்டதோ தெரியவில்லை, நம் நாட்டின் பெரும்பான்மையான விலை நிலங்களும் ,பயிர்களும் பெரும் மழையினாலும் , பெரும் வெள்ளத்தாலும் சேதமடைந்து, இத்தனை நாள் உழைத்த பலனை முழுமையாக அனுபவிக்க முடியாமலும், சில இடங்களில் தன்னுடைய நிலம் எங்கே என்று அடையாளம் கண்டு கொள்ளகூட முடியாத நிலைமையிலும் நம் விவசாய குடும்பங்கள் இருக்கும் இந்த  சூழ் நிலை உருவாகி இருக்கின்றது என்பதை நாம் அறிவோம்.

இந்த நிலையில் வந்திருக்கும் இந்த உழவர் திருநாள், நம்மில் எத்தனை உழவருக்கு மகிழ்ச்சியை கொடுக்ககூடும்?

உலகிற்கே படி அளக்கும் உழவன் இன்று ஒரு கிலோ அரிசிக்கும் ஒருகிலோ பருப்பிற்கும், ஒரு கிலோ சர்க்கரைக்கும், ஒரே ஒரு துண்டு கரும்புக்கும் பல மணி நேரத்திற்கும் மேலாக ரேஷன் கடை வாசலில் அலைமோதி நிற்கும் இந்த அவலமான சூழ் நிலை உருவாகி இருக்கின்றது. 

இந்த நிலையில்  வந்திருக்கும் இந்த பொங்கல் நாட்களை கொண்டாடும்போது, கொஞ்சம் கடந்த மாத - நிகழ் மாத சூழ் நிலையை நினைவில் கொண்டு, ஆடம்பரமில்லாமலும் அடுத்தவருக்கு உதவியும் கொண்டாடுவது நமது தார்மீக கடமையும் பொறுப்பும்  ஆகும்.

செலவுகளை குறைத்தும் சிக்கனத்தை கடைபிடித்தும் இந்த ஆண்டு இந்த பொங்கல் திரு நாட்களை கொஞ்சம் எளிமையாக  கொண்டாடுவது சிறப்பு.

ஏற்பட்ட இன்னல்களின் ரணங்கள் ஆறியபின்னர் அடுத்து வரும் பண்டிகைகளை கொஞ்சம் விமரிசையாக கொண்டாடிகொள்ளலாம்.

அதுவரையில் எளிமையே இனிமை என்றெண்ணி இந்த ஆண்டு கொஞ்சம் LOW பட்ஜெட்டில் பொங்க"low" பொங்கல் என குழவி இட்டு பொங்கலை இனிதே கொண்டாடி மகிழ அன்புடன் வாழ்த்துக்கள் கூறி முடிக்கிறேன்.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ

9 கருத்துகள்:

  1. ஜல்லிகட்டு இல்லாத இந்த பொங்கல்.. பொங்கlow பொங்கல்தான்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சரியா சொன்னீங்க உங்க சொல்LOW சொல்லுதான்.

      கோ

      நீக்கு
  2. வணக்கம்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் அரசே
    பொங்கல் குறித்த பதிவு அருமை. தங்கள் சொல்லாடல் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.

    பதிலளிநீக்கு
  4. பேராசிரியருக்கு,

    வருகைக்கும் பாராட்டுக்கும் என் சொல்லாடலில் நீங்கள் வியந்ததாக சொல்லும் வார்த்தைகளுக்கும் நன்றிகள்.

    கோ

    பதிலளிநீக்கு