பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 13 அக்டோபர், 2017

பார்க்கும் இடமெங்கும் பரவசம்...

நெஞ்சம் முழுதும் உன் வசம்!  

நண்பர்களே,

பல இடங்களை சுற்றிப்பார்க்கும்படி அன்றைய நாளின் திட்டம்: தங்கி இருக்கும் இடத்திலிருந்து பல மையில் தூரத்தில் இருக்கும் பிரபலமடைந்து கொண்டிருக்கும் ஒரு பொழுது போக்கு பூங்கா செல்வது.
அது துபாய்க்கு அபுதாபிக்கும் இடைப்பட்ட எல்லை பிரதேசத்தில் அமைந்திருக்கும் ஒரு விஸ்த்தாரணமான , பாதுகாப்பான, சகல வசதிகளும் நிறைந்த ஒரு பொழுதுபோக்கு வளாகம் அந்த பூங்கா..

வெயிலின் உக்கிரம் தனது அக்கிரமத்தை கொஞ்சம் அடக்கி வாசிக்க துவங்கும் மாலை மூன்று மணிக்கு மேல் தான் திறக்கப்படுகிறது அந்த பூங்கா

அமெரிக்காவின் புளோரிடா,  பிரான்சின் பாரீசு  போன்ற   இடங்களில் அமைந்திருக்கும் உலக சுற்றுலா மக்களை பெரிதும் கவர்ந்திழுக்கும் டிஸ்னி  லேண்ட் போன்றதான ஒரு அமைப்பு கொண்டதுதான் அந்த வளாகம்.

அங்கே பல தரப்பட்ட கண் கவர் நிகழ்ச்சிகள், காட்சி  கூடங்கள் , கலை பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கங்கள், கடைகள்,உணவு கூடங்கள் , மூன்று, ஐந்து  மற்றும் ஏழு பரிமாணங்களில் காட்டபடும் மோஷன் ஸ்டிமுலேட்டர் திரை படங்கள், மேடை நிகழ்ச்சிகள், வண்ண உடை அணிந்து நளின நடனமாடும் கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகள் அனைத்தும் பார்க்கும்போது நாம் எதோ ஒரு சொர்கபுரியின் வாசல் கடந்து உள்ளே பிரவேசிப்பதுபோன்ற உணர்வினை பெற முடிகிறது.

பல அரங்குகளை சுற்றி பார்த்த எனக்கு  மிகவும் திரில்லாகவும் வியப்பாகவும் இருந்த பல விடயங்களில், முக்கயமானவை,  கற்பனை குழைத்து நவீன தொழில் நுட்ப யுக்திகளை முழுமையாக உட்புகுத்தி மூன்று  குறும்படங்கள் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த முவ்வேறு திரை அரங்குகளில் திரையிட்டு காட்டப்பட்ட குறும்படங்கள்.

அவற்றுள் ஒன்று, 1893 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு  நிகழச்சியாக  நம் நாட்டை ஆண்ட வெள்ளையர்களின் அரசாங்கத்தை சார்ந்த  ரஸ்ஸல் எனும் ஒரு கொடுங்கோல் பிரபு , அவனது ஆட்சி அதிகாரத்திற்குட்பட்ட நிலப்பரப்பில் உள்ள குடியானவர்களுக்கு நில வரியை  ஏகத்திற்கு  உயர்த்தி விதித்திருந்தான்.

எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகப்படியான வரி சுமையை தாங்க முடியாத அந்த கிராமத்து மக்கள் செய்வதறியாது குமுறிக்கொண்டிருந்தனர்.

அப்போது  இந்த கொடுங்கோலை எதிர்க்க புறப்பட்டான் ஒரு இளைஞன்.  கடும் வாக்குவாதத்திற்கு பிறகு ஆட்சியாளனுக்கும்  அந்த இளைஞனுக்கும்  இடையில் ஒரு ஒப்பந்தம் போடப்படுகிறது.

அதாவது , பிரிட்டிஷ் நாட்டின் தேசிய விளையாட்டான கிரிக்கட் போட்டியில் அந்த கிராமத்து இளைஞர்கள் தங்களின் அணியை வென்றுவிட்டால், விதிக்கப்பட்ட வரியினை முழுமையாக ரத்து செய்துவிடுவதாகவும் இனி அவர்கள் எந்த வரியையும் செலுத்த தேவை இல்லை எனவும் ரஸ்ஸலால் முன் மொழியப்பட்ட இந்த போட்டிக்கு உடன் படுகின்றனர் அந்த கிராமத்து மக்கள்.

கிரிக்கட் என்றால் என்ன என்று கூட அறிந்திராத அந்த மக்களை எப்படி தயார் படுத்தி அந்த வெள்ளையர்களை எதிர்கொள்கின்றனர் என்பதே அந்த குறும்படத்தின் கதையும் காட்சிகளும்

சாதாரணமாக மூன்று  பரிமாணத்தில் காட்சிகளை காணும்போதே பிம்பங்கள் நம் கண் முன்னே நெருக்கமாக வந்து மிரட்டும் , அதுவே ஏழு பரிமாணம் என்றால் எப்படி இருக்கும்?.

தொடர்வோம் பிறிதொரு நாளில்.

அதுவரை.

நன்றி.

மீண்டும் ச(சி)ந்திப்போம்.

கோ.

6 கருத்துகள்:

  1. என்னங்க இது நியாயமா குறும்படத்தை பார்த்து விமர்சித்துவிட்டு அந்த படத்தின் பெயர் அதற்கு லிங்க் இருந்தால் அதையும் தந்திருந்தால்தானே நாங்களும் பார்த்து அனுபவிக்க முடியும் இப்பிடி நல்ல கதையை சொல்லி அம்போ என்று விட்டுவிட்டு போய்யிட்டிங்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றிகள். லிங்க் யு டியூபில் இருக்குமென்று நினைக்கின்றேன். பார்த்து மகிழவும்.

      கோ

      நீக்கு
  2. ஏழு பரிமாணம்
    வியப்பாக இருக்கிறது நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் தொடர் ஊக்கத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்.

      கோ

      நீக்கு
  3. துபாய் பூங்கா பற்றி விவரணம் அருமை! நம் நாட்டு ஹிந்திப் படம் ஆச்சே அது...லகான் படம் குறும்படமா!!??

    வழக்கம் போல மிக அருமையான வர்ணனை..துபாய் பற்றியும், பூங்கா பற்றி மேலும் அறியத் தொடர்கிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் யூகித்தது சரியே வழக்கம்போல்.

      வருகைக்கு மிக்க நன்றிகள்.

      கோ

      நீக்கு